/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போராட்டத்தில் ஈடுபட செவிலியர் சங்கம் முடிவு
/
போராட்டத்தில் ஈடுபட செவிலியர் சங்கம் முடிவு
ADDED : செப் 25, 2025 12:29 AM
கோவை: தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,தொடர் போராட்டங்களில் குதிக்க, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில பொதுச்செயலாளர் சுபின் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவமனையில், 30,000 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகிறோம். அதில், 17,000 பேர் நிரந்தர ஊதிய பிரிவிலும், 13,000 பேர் ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகிறோம்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு கண்டுகொள்ளவில்லை. நிரந்தர பிரிவில் உள்ள செவிலியர்கள், 55 ஆயிரம் ரூபாய், ஒப்பந்த பிரிவினர் 18,000 ஊதியம் பெறுகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 14ல் கோரிக்கை அட்டை அணிந்து, முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம், 28ல் மாவட்ட தலைநகரில் மாலை நேர ஆர்ப்பாட்டம், தொடர்ந்து தர்ணா, உண்ணாவிரதம் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.