ADDED : ஜூலை 18, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், நீதிமன்ற உத்தரவின் படி சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்கள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கோவை மாவட்ட அரசு மருத்துவமனை செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.