ADDED : அக் 29, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
பணி நிரந்தரம் தொடர்பாக, மாநில அரசின் மேல்முறையீடு வழக்கை கைவிடுதல், செவிலியர் கண்காணிப்பாளர் தரம்-2 பணியிடத்தை மீண்டும் உருவாக்குதல், காலியிடங்களை நிரப்புதல் தேவையான புதிய பணியிடம் உருவாக்குதல், 11 மாத ஒப்பந்த பணி முறையை ஒழித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சங்க மாவட்ட தலைவர் ராமலட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் தங்கமுனீஸ்வரி, இணை செயலாளர் மாராத்தாள் உள்ளிட்ட பலர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

