/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கருணை, கண்ணியத்துடன் செவிலியர்கள் சேவையாற்றணும்'
/
'கருணை, கண்ணியத்துடன் செவிலியர்கள் சேவையாற்றணும்'
ADDED : ஜூலை 04, 2025 10:58 PM

கோவை; மதுக்கரை, நைட்டிங்கேல் கல்விக்குழுமம் சார்பில், அன்னை மீனாட்சி மற்றும் நைட்டிங்கேல் நர்சிங் கல்லுாரிகளில் தேர்ச்சி பெற்ற செவிலிய பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. நைட்டிங்கேல் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார்.
மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ''பட்டப்படிப்பால் உங்களது வாழ்வை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும். கருணையுடனும், கண்ணியத்துடனும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சேவையாற்ற வேண்டும்,'' என்றார்.
விழாவில், 400க்கும் மேற்பட்ட மாணவியர் பட்டங்களையும், பதக்கங்களையும் பெற்றனர். முன்னாள் மத்திய கல்வியமைச்சர் சஞ்சய் பசுவான், நடராஜ் மருத்துவமனை இயக்குனர் நடராஜ், நைட்டிங்கேல் கல்வி குழும செயலாளர்கள் ராஜீவ், சந்தியா, சஞ்சய் மணி, மீனா மற்றும் கல்லுாரி முதல்வர்கள் துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.