/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த ஊதியத்தில் செவிலியர் அவதி
/
குறைந்த ஊதியத்தில் செவிலியர் அவதி
ADDED : நவ 25, 2025 05:55 AM
கோவை: தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.ஆர்.பி., வாயிலாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணிநிரந்தம் செய்வதில் தாமதம் தொடர்வதாக, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2015ம் ஆண்டு 12 ஆயிரம் செவிலியர்கள், எம்.ஆர்.பி. வாயிலாக இரண்டு ஆண்டுக்கு பின்னர், காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்து, பணிநியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது வரை பணிநிரந்தரம் செய்யவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில பொதுச்செயலாளர் சுதீன் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், 2005ம் ஆண்டு 12 ஆயிரம் பேர் பணிநியமனம் செய்ததில், 8000 பேர் மட்டும் பல்வேறு போராட்டங்களுக்கு பின், பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். தற்போது வரை, 4000 பேர் பணிநிரந்தரம் செய்யாமல் தவித்து வருகின்றோம். அவசர விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை சலுகைகள் கூட இல்லை. அரசு மருத்துவமனைகளில் சமவேலை செய்தும், சம ஊதியம் என்பது இல்லை. கடந்த வாரம் வரை, பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொண்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றம் உத்தரவு இருந்தும், 4000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

