/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
/
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
ADDED : ஜன 08, 2024 11:14 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து நேற்று முதல், 12ம் தேதி வரை பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும், 65 செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து தங்களது பணிகளை மேற்கொண்டனர்.
பணி மூப்பு பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு எவ்வித பதவி உயர்வுமின்றி செவிலியர்களாகவே பணி ஓய்வு பெற்று செல்வதை தடுத்திட வேண்டும்.
பதவி உயர்வு பெறும் நிரந்தர செவிலியர் காலிப்பணியிடங்களில், எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணியாற்றினர்.