ADDED : பிப் 08, 2024 06:37 AM

அ நிறம் | அளவு
கோவை: சேரன் செவிலியர் கல்லுாரியின், 33வது பிஎஸ்.சி., நர்சிங் மாணவர்களின் விளக்கு ஏற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது.
தேசிய விருது பெற்ற, சென்னை அரசு மருத்துவமனை செவிலியர் கணபதி சாந்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், குத்துவிளக்கேற்றி நிகழ்வை துவக்கினார்.
தொடர்ந்து, மாணவர்கள் விளக்கேற்றி 'செவிலியர் துறையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோம்' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கல்லுாரி முதல்வர் மீனா குமாரி, துணை முதல்வர் மகாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
