/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 25, 2024 08:39 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., -கல்லுாரியில், ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒருங்கிைணந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் வாயிலாக ஆண்டு தோறும் செப்., 1 முதல், 30 வரை, ஊட்டச்சத்து மாத விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரத்தசோகை இல்லாமை, குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு, ஊட்டச்சத்தும் கல்வியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், மாணவ, மாணவியர் இடையே சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவு தயாரிப்பு, அடுப்பு இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் தயாரிப்பது மற்றும் சிறுதானியங்கள் குறித்த ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்தார். முன்னதாக, இணைப் பேராசிரியர் மகேஸ்வரி, அனைவரையும் வரவேற்றார்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, 'ஊட்டச்சத்து உணவு முறைகள்,' என்ற தலைப்பில் விளக்கிப் பேசினார். 'மிரக்கல்' மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பிரதீப், 'இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்,' என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, நாச்சிமுத்துக் கவுண்டர் நகராட்சி பிரவசவிடுதி இணை இயக்குனர் பரணிகாஞ்சனா, மாரியம்மாள் ஸ்வீட்ஸ் இயக்குனர் தனபால் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர். முடிவில், உதவிப் பேராசிரியர் அருள்ஜோதி நன்றி கூறினார். மாணவ, மாணவியருக்கு ஊட்டசத்து நிறைந்த சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.