தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்


UPDATED : நவ 21, 2026 03:04 PM

ADDED : நவ 21, 2026 03:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 03:04 PM ADDED : நவ 21, 2026 03:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கவும், ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்கவும், ஊராட்சி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் சிறுதானிய போட்டிகள் நடக்கின்றன.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்புடன், வட்டார அளவிலான போட்டிகள் வரும் 24ம் தேதி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும், மாவட்ட அளவிலான போட்டிகள் 27ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நடக்கிறது.

ஊராட்சி அளவிலான போட்டிகளில் முதல் பரிசு ரூ.400, இரண்டாம் பரிசு ரூ.300, மூன்றாம் பரிசு ரூ.200; வட்டார அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ.4,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.8,000, மூன்றாம் பரிசாக ரூ.6,000 மற்றும் ஆறுதல் பரிசாக தலா ரூ.2,000 வீதம் இருவருக்கு வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us