/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
/
வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
ADDED : டிச 27, 2024 10:58 PM
பொள்ளாச்சி,; வளரிளம் பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை மேற்கொண்டும், எடை மற்றும் உயரம் கணக்கிட்டு, வளர்ச்சியைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் 'போஷான் அபியான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிமுத்து பிரசவ விடுதியில், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா தலைமை வகித்து, முகாமில் பங்கேற்க, 11 முதல் 18 வயது பெண்களுக்கு, ஊட்டச்சத்து உணவுப்பொருட்களை உள்ளடக்கிய 'கிட்' மற்றும் நலக்குறிப்பேடுகள் வழங்கினார்.
மேலும், பெண்களுக்கு, ஹீமோகுளோபின் பரிசோதனை மேற்கொண்டும், எடை மற்றும் உயரம் கணக்கிட்டும், வளர்ச்சியைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.
மகப்பேறு டாக்டர்கள் மகேஸ்வரி, பிரீத்தி, தாய்சேய் சுகாதார அலுவலர், சமூக நல அலுவலர், கிருஷ்ணம்மாள் கல்லுாரி ஊட்டச்சத்து நிபுணர், திறன்மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.