ADDED : நவ 20, 2024 10:20 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லுாரியில், ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவ, மாணவியர், மயிலேறிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கல்லுாரி முதல்வர் சுதீஷ் மணாலில் தலைமை வகிக்க, தலைமையாசிரியர் உமாகவுரி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் தினத்தையொட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மரக்கன்று நடவு செய்து, மாணவர்களை மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினர். மேலும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர்.
