ADDED : அக் 02, 2025 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை; ஆனைமலை அருகே, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
ஆனைமலை 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெரியபோது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் பங்கேற்று, கர்ப்பிணிகள், 20 பேருக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.