/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
ADDED : ஜூலை 22, 2025 10:22 PM

மேட்டுப்பாளையம்; சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், அகவிலை படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கருப்பு முக்காடிட்டு ஒப்பாரிப் போராட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கப் பொருளாளர் மாராத்தாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வீரபத்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பிரகலதா உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதிப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
6750 ரூபாய் அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பேசினர்.
இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தால், ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் வேன் பிரசாரம் செய்வது.
தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 100 பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் சாவித்திரி நன்றி கூறினார்.