/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 10, 2025 10:15 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன் நடந்தது.
மாவட்ட தலைவர் வாசுகி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய தலைவர் தேவி, செயலாளர் மங்களேஸ்வரி, துணை தலைவர் சாந்தி, இணை செயலாளர்கள் சத்யா, அன்னபூரணி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் டெய்சி மேரி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் ஒரு அமைப்பாளர், மூன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பில் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
'ஆன்ட்ராய்டு போன்' இல்லாத நிலையில் சத்துணவு மைய தரவுகளை பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.