/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தற்காலிக கடைகளால் தொழில் பாதிக்கும்! அசோசியேஷன் சார்பில் மனு
/
தற்காலிக கடைகளால் தொழில் பாதிக்கும்! அசோசியேஷன் சார்பில் மனு
தற்காலிக கடைகளால் தொழில் பாதிக்கும்! அசோசியேஷன் சார்பில் மனு
தற்காலிக கடைகளால் தொழில் பாதிக்கும்! அசோசியேஷன் சார்பில் மனு
ADDED : அக் 10, 2025 10:14 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ரோட்டை ஆக்கிரமிக்கும் தற்காலிக கடைகள், திருமண மண்டபங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளால், தொழில் பாதிக்கப்படும், என டெக்ஸ்டைல்ஸ் மர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரனிடம், பொள்ளாச்சி டெக்ஸ்டைல்ஸ் மர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் தீபாவளி பண்டிகை மற்றும் இதர முக்கிய பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய வியாபாரம் நடைபெறும் ரோடுகளில், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால், ஆண்டு முழுவதும் சொத்து வரி, ஜி.எஸ்.டி. தொழில் வரி, வருமான வரி செலுத்தி, கடை வாடகை, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, நகரின் ஒரு சில திருமண மண்டபங்களில் பண்டிகை கால தற்காலிக கடைகள் போட்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால், நகரப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மிகவும் வியாபாரம் பாதிக்கிறது.
சமீபத்தில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், திருமண மண்டபங்களில் வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு கொடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
இது போன்று, நகராட்சி தலைவர் சியாமளா, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஏ.எஸ்.பி. அலுவலகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவற்றுக்கு மனு அனுப்பியுள்ளனர். தொழில்வர்த்தக சபை சார்பில், சப் - கலெக்டருக்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்பப்பட்டுள்ளது.