/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணி
/
ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 08, 2025 10:33 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, நாச்சிமுத்து கவுண்டர் நகராட்சி பிரசவ விடுதி மற்றும் என்.ஜி.எம். கல்லுாரி சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன், என்.ஜி.எம். கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், பிரசவவிடுதி இணை இயக்குனர் டாக்டர் பரணி காஞ்சனா, குமரகுரு கல்லுாரி சமூக பொறுப்பு தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
என்.ஜி.எம். கல்லுாரியில் துவங்கிய பேரணியில், ஊட்டச்சத்து பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வினியோகித்தனர்.
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், சீரான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், துரித உணவுகள் வாயிலாக ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே தெரிவிக்கப்பட்டது. நாச்சிமுத்து பிரசவ விடுதியில் பேரணி நிறைவடைந்தது.