/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மடிப்பிச்சை கேட்ட சத்துணவு பணியாளர்கள்
/
மடிப்பிச்சை கேட்ட சத்துணவு பணியாளர்கள்
ADDED : மே 10, 2025 01:12 AM

கோவை : மதச்சின்னங்களை இழிவுபடுத்தக்கூடாது என்ற, கோர்ட் உத்தரவை மீறி நேற்று நாமம் மற்றும் திருநீற்றை நெற்றியில் அணிந்து கொண்டு, மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்தது.
தமிழக அமைச்சர் பொன்முடி, இந்து சமயத்தில் சைவ, வைணவ மத சின்னங்களை, இழிவுபடுத்தி பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சூழலில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர், தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், சிறப்பு ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்குதல், நீதியரசர் பட்டு தேவானந்த் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்துதல் உள்ளிட்ட, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பட்டை நாமமிட்டு, மடிப்பிச்சை ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.