/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஊட்டச்சத்து பானம்
/
சூலுார் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஊட்டச்சத்து பானம்
சூலுார் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஊட்டச்சத்து பானம்
சூலுார் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஊட்டச்சத்து பானம்
ADDED : ஜூன் 10, 2025 09:53 PM

கோவை; சூலூர் ராவத்தூர் பகுதியில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்கள், சிறுதானிய ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 31 மாணவர்கள் மற்றும் 40 மாணவிகள் என மொத்தம் 71 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் உடல்நலனையும், ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்தும் நோக்கில், சிறுதானிய ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள், காலை 11:00 மணி இடைவேளை நேரத்தில், வெள்ளை சோளம், கம்பு, கோதுமை, குருணை அரிசி, பச்சை பயிறு, ராகி, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி போன்ற இயற்கை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பானம் வழங்கப்படுகிறது.
பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி கூறுகையில், ''மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் மாணவர்களின் பள்ளி வருகையையும் உறுதிப்படுத்தும்,'' என்றார்.