/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்; வேளாண் மாணவியர் செயல் விளக்கம்
/
தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்; வேளாண் மாணவியர் செயல் விளக்கம்
தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்; வேளாண் மாணவியர் செயல் விளக்கம்
தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்; வேளாண் மாணவியர் செயல் விளக்கம்
ADDED : ஏப் 07, 2025 10:05 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, 4ம் ஆண்டு படிக்கும் மாணவியர், கிராமப்புற வேளாண்மை பயிற்சி பெற்று வருகிறார்கள். 65 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறுதல், பல்கலை புதிய ரகங்களின் பயன்பாடு, வேளாண்மையில் புதிய தொழில்நுட்பத்தின் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிளிச்சி கிராம விவசாயிகளிடையே வேளாண் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகளின் உதவியுடன், அதிக அளவில் பயிரிடப்படும் தென்னை மரத்தில் பயன்படுத்தப்படும் நுண்ணூட்டச் சத்து ஊக்கியான தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின், தென்னை டானிக் பயன்படுத்தும் முறை குறித்து, பல்கலை மாணவியர் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இது குறித்து, வேளாண் பல்கலை மாணவியர் கூறுகையில்,' தென்னை டானிக் அளிப்பதால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கையின் திறன் கூடி தென்னம்பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது மட்டுமின்றி பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. இதனால் விளைச்சல், 20 சதவீதம் அதிகரிக்கும்' என்றனர்.