/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகள் தராளம் போக்குவரத்து நெரிசல்
/
ஆக்கிரமிப்புகள் தராளம் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 18, 2024 12:20 AM
உடுமலை : உடுமலையில் பிரதான ரோடுகளில், ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடும், திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, தளி ரோடு போன்ற பிரதான ரோடுகள் அமைந்துள்ளன. இதில் ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி சந்தை, வணிக நிறுவனங்கள், அரசு உயர்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, ரயில்வே ஸ்டேஷன் போன்றவை அமைந்துள்ளன.
இங்கு கடைகளின் ஆக்கிரமிப்புகளும், தள்ளுவண்டிகளும் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில், சிறுசிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இது மக்களுக்கு தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இதே போல், கல்பனா ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.
எனவே, பிரதான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரும், நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.