/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு! அகற்ற சாலை பாதுகாப்பு சங்கம் மனு
/
போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு! அகற்ற சாலை பாதுகாப்பு சங்கம் மனு
போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு! அகற்ற சாலை பாதுகாப்பு சங்கம் மனு
போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு! அகற்ற சாலை பாதுகாப்பு சங்கம் மனு
ADDED : பிப் 07, 2025 10:15 PM
பெ.நா.பாளையம்; மேட்டுப்பாளையம், திருச்சி ரோடுகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர், போலீசாரிடம் மனு அளித்தனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள மார்க்கெட்களுக்கு அதிகாலையில் வரும் வியாபாரிகள் உரிய முறையில் வாகனங்களை நிறுத்துவதில்லை. இதனால், அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஆட்டோ, வேன், ஆம்புலன்ஸ் என அனைத்தும், ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைப்பதால், மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
கவுண்டம்பாளையம் ஐ.டி.ஐ., அருகே உணவு வாகனங்கள் மற்றும் பழ கடைகளின் ஆக்கிரமிப்பால், அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. துடியலுாரில் இருந்து வெள்ளக்கிணறு வழியாக சரவணம்பட்டி, சத்தி செல்லும் வழியில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கே.என்.ஜி., புதுாரில் இருந்து உரும்மாண்டம்பாளையம் செல்லும் வழியில் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மணியகாரம்பாளையம் ரோடு, கணபதி ரோடு, அத்திப்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.
மேலும், திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை, சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லுார் பகுதிகளில் இருபுறமும் உள்ள கடைகள், சாலைகளை ஆக்கிரமித்து விளம்பர போர்டுகளை வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல முடிவதில்லை.
இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், போக்குவரத்து நெரிசல் குறைந்து, விபத்து இல்லாமல் பொதுமக்கள் தாராளமாக சென்று வர முடியும். இதற்கு மாநகர போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் தலைமையில் சங்க நிர்வாகிகள், கோவை மாநகர காவல் உதவி ஆணையர் அசோக் குமாரிடம் மனு அளித்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள், குறைந்த கட்டண வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க முன்வர வேண்டும். மேலும், தனியார் வாகன நிறுத்த இடங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதால் பலர் பஸ் ஸ்டாண்ட்களிலும், பொது இடங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.