/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோட்டார் அறையை ஆக்கிரமித்து பழக்கடை
/
மோட்டார் அறையை ஆக்கிரமித்து பழக்கடை
ADDED : டிச 18, 2024 10:53 PM

கோவை; கோவை வைசியாள் வீதியில், குடிநீர் தொட்டி மோட்டார் அறையை ஆக்கிரமித்து பழக்கடை நடத்தப்படுகிறது. தற்போது அதன் முன்புறம் தள்ளுவண்டி வைத்து, நிரந்தரமாக்குவதற்கான முயற்சி நடந்து வருகிறது.
கோவை நகர் பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக எந்தெந்த ரோட்டில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன என்பதை, போக்குவரத்து போலீசார் பட்டியலிட்டு, கலெக்டர் தலைமையில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவில் சமர்ப்பித்தனர்.
இருப்பினும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அக்கறை செலுத்தவில்லை.
வைசியாள் வீதி சந்திப்பில் இருந்து செல்வ புரம் செல்லும் ரோட்டில் தண்ணீர் தொட்டி மற்றும் மோட்டார் ரூம் இருக்கிறது. அதை வியாபாரி ஒருவர் ஆக்கிரமித்து, பழக்கடை நடத்தி வருகிறார்.
சமீபகாலமாக தள்ளுவண்டி நிறுத்தி வைத்து, நிரந்தரமாக பழக்கடை நடத்த ஆரம்பித்து விட்டார்.
அப்பகுதியில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றுகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், இத்தகைய ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.

