ADDED : மார் 27, 2026 04:48 PM

அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் பணியில், 17,102 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
ஓட்டு சாவடி தலைமை அலுவலர்களுக்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறும். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு துறையில் இருந்தும் பிரதிநிதிகள், உத்தரவு நகலை பெற்று சென்றனர்.
'உடம்பு சரியில்லை. நடக்க முடியாது. தேர்தல் வேலையே வேணாமுங்க... ' என்கிற ரீதியில், சில ஊழியர்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கை சரியானதா என்பதை பரிசீலிக்க, டி.ஆர்.ஓ. வித்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு நடைபெறும்போது, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
