தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மிஷின் வெடித்ததில் ஒடிசா தொழிலாளி பலி

மிஷின் வெடித்ததில் ஒடிசா தொழிலாளி பலி

மிஷின் வெடித்ததில் ஒடிசா தொழிலாளி பலி


ADDED : ஏப் 24, 2025 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றிய வட மாநிலத்தவர் பலியானார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபான், 28, கூலி தொழிலாளி. இவர், கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் உள்ள தனியார் காஸ்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, தபான் வேலை செய்து கொண்டிருந்த போது, மிஷின் பழுதடைந்து வெடித்ததில், அதன் பாகங்கள் தபான் மீது பட்டு, படுகாயமடைந்தார்.

இதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us