/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர்கள் கைது
/
கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர்கள் கைது
ADDED : ஆக 28, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர்கள் கைது
கோவில்பாளையம் அருகே வையாபுரி நகரில், போலீஸ் எஸ்.ஐ., குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று மதியம் சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் ஒடிசா மாநிலம், சுக்கிரன்பூரை சேர்ந்த தொழிலாளி மனோஜ் மெகாபர், 32. என்பவரும், ஒடிசா மாநிலம், சைந்தலா பாலா நகரைச் சேர்ந்த மதுசூதன் கும்பர், 38. என்பவரும் பிடிபட்டனர்.
இருவரும் தற்போது திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.