/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 பவுன் நகைகள் திருட்டு; ஒடிசா வாலிபர்களுக்கு சிறை
/
10 பவுன் நகைகள் திருட்டு; ஒடிசா வாலிபர்களுக்கு சிறை
10 பவுன் நகைகள் திருட்டு; ஒடிசா வாலிபர்களுக்கு சிறை
10 பவுன் நகைகள் திருட்டு; ஒடிசா வாலிபர்களுக்கு சிறை
ADDED : ஜூலை 29, 2025 09:04 PM
கோவை; பிளம்பிங் வேலை பார்க்க வந்து வீட்டில் இருந்து, 10 பவுன் நகைகளை திருடிய இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.
பீளமேடு அருகே உள்ள உடையார்பாளையம் என்.ஜிஆர்.வீதியை சேர்ந்தவர் தீபன் ராஜ், 34. இவரது அண்டை வீட்டில் பிளம்பிங் வேலை நடந்தது. இப்பணியில் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் சாகு, 19, மில்லா சய்தி, 31 ஆகியோர் ஈடுபட்டனர்.தீபன் ராஜ் மதிய உணவுக்காக, வீட்டின் தரைத் தளத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டிலிருந்த ஆறு பவுன் செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட, 10 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருந்தன.
தீபன்ராஜ் புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஒரிசா மாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில், நகைகளை திருடியது உறுதியானது. இருவரையும் சிறையில் அடைத்தனர்.