/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓ.இ., மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்
/
ஓ.இ., மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்
ADDED : ஏப் 15, 2025 06:56 AM

கோவை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓ.இ., மில்கள், இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக, மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு (ஆர்.டி.எப்.,) மாநில தலைவர் ஜெயபால் கூறியதாவது:
கிரே, சலவை, காட்டன், பாலியஸ்டர், நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ., மில்களின் நூல்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். கழிவுப் பஞ்சுகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மின்வாரியம் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். 457 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த, 2022ல் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடப்பாண்டு ரத்து செய்ய வேண்டும்.
ஒப்பந்தக் கூலியைக் குறைக்காமல், நியாயமான கூலி கேட்டு போராடும் நெசவாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, ஏப்.,15ம் தேதி(இன்று) ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஓ.இ., மில்கள் ஈடுபடுகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.