/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி விநாயகர் கோவிலில் ரூ.93 ஆயிரம் காணிக்கை
/
சக்தி விநாயகர் கோவிலில் ரூ.93 ஆயிரம் காணிக்கை
ADDED : ஜூன் 10, 2025 09:49 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணியதில், பக்தர்கள், 93 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடும் ஒவ்வொரு மாதம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுவர். இக்கோவிலில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியல் காணிக்கை மூன்றில் இருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை எண்ணுவது வழக்கம். நேற்று சக்தி விநாயகர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தலைமையில், கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில், கோவில் பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 93 ஆயிரத்து, 650 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.