நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை தெற்கு, குனியமுத்துார் கோட்டத்துக்கு உட்பட்ட, வெள்ளலுார் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணங்களால், இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளலுார், என்.ஜி.ஆர்., வீதியில் செயல்பட்டு வந்த வெள்ளலுார் பிரிவு அலுவலகம், நாளை (ஏப்., 14ம் தேதி) முதல் கென்னடி வீதி, பழைய கிட்டான் டீக்கடைக்கு அருகில் உள்ள கட்டடத்தில் செயல்படும்.
இத்தகவலை, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.