/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ உபகரண ஆய்வகம் அமைக்க இடம்; அதிகாரி ஆய்வு
/
மருத்துவ உபகரண ஆய்வகம் அமைக்க இடம்; அதிகாரி ஆய்வு
ADDED : ஏப் 24, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ;தமிழகத்தில் முதன்முறையாக, கோவையில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் ஆய்வகத்திற்காக, இறுதி செய்யபட்ட இடத்தை, மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர் கண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் 20 ஆயிரம் சதுர அடியில் மருத்துவ உபகரணங்கள் ஆய்வகம், ரூ.29.67 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளது. இதற்காக, கோவையில் ஐந்து இடங்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் காண்பிக்கப்பட்டது. அதில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இடம், இறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

