/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்
/
போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்
போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்
போலி நகைக்கு கொடுத்த கடன் வசூலிக்க அதிகாரிகள் மெத்தனம்
ADDED : டிச 12, 2025 05:03 AM
கோவை: துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன உறுப்பினர்கள், கலெக்டர்,மாநில பதிவாளர், இணைப்பதிவாளர் உட்பட அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள மனு:
துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், பல மாதங்களுக்கு முன் போலி நகையின் பெயரில் பல கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின், போலி நகை அடமானம் வைத்த சார்லஸ், நகை மதிப்பீட்டாளர் கிருத்திகை ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், ஸ்தாபனத்தின் வாயிலாக வழங்கப்பட்ட, பல கோடி ரூபாய் நகை கடன் தொகை, அதற்கு இன்றைய தேதி வரை வட்டியும், அபராத வட்டியும் மற்றும் வசூல் செலவு தொகையும், கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; வசூல் ஆகவும் இல்லை.
காலம் கடந்து செல்ல, செல்ல ஸ்தாபனத்திற்கு வர வேண்டிய தொகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்தாபனத்திற்கு முழு தொகையும் வசூல் செய்து தர வேண்டியது, கூட்டுறவு துறையின் பொறுப்பாக இருப்பதால்,அதற்கான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

