/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பு குறித்து அதிகாரிகள் களஆய்வு
/
குழாய் உடைப்பு குறித்து அதிகாரிகள் களஆய்வு
ADDED : ஏப் 23, 2025 10:51 PM
பொள்ளாச்சி,; ஆனைமலை அருகே, குழாய் உடைப்பு குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் களஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆழியாறு ஆற்றுப்பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. இவ்வாறு, பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஆனைமலை, அங்கலக்குறிச்சி கோட்டூர் பிரிவு அருகே, குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில், புகார் தெரிவித்தனர். கோடை காலத்தில் தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கோட்டூர் பிரிவு அருகே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் களஆய்வு செய்தனர். அது, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான குழாய் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கோட்டூர் பிரிவு அருகே தனியார் நிறுவனத்துக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உட்பட்ட குழாய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு குழாயை சரி செய்ய அறிவுரை வழங்கப்படும்,' என்றனர்.

