/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் பிரச்னைக்கு தீர்வு கண்ட அதிகாரிகள்; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
மக்கள் பிரச்னைக்கு தீர்வு கண்ட அதிகாரிகள்; 'தினமலர்' செய்தி எதிரொலி
மக்கள் பிரச்னைக்கு தீர்வு கண்ட அதிகாரிகள்; 'தினமலர்' செய்தி எதிரொலி
மக்கள் பிரச்னைக்கு தீர்வு கண்ட அதிகாரிகள்; 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : டிச 23, 2024 10:12 PM

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில் இருவேறு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில், 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் வியாபாரிகள் நலன் கருதி நகராட்சி சார்பில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், அம்மா உணவகத்தின் அருகே நடைபாதையை ஒட்டி இருந்த குடிநீர் குழாய் தனியார் கட்டுமான பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், வியபாரிகள் உடனடியாக மாற்று இடத்தில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி சார்பில் அம்மா உணவகம் செல்லும் வழியில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால், மார்க்கெட் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் உடனடியாக குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 'தினமலர்' செய்தி எதிரொலியாக குடிநீர் குழாயில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதே போல், வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில் உயர்மின் அழுத்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் புதரில் மறைந்து கிடக்கிறது. வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை ரோட்டில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பம் புதர்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.
இது குறித்து, நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, நேற்று காலை மின் கம்பத்தை சூழ்ந்துள்ள புதர்செடிகளை அகற்றினர். அதற்காக, மின்பாதையில் மின்வினியோகத்தை நிறுத்தம் செய்து, புதர், செடி, கொடிகள் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.