/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு
/
தொகுப்பு வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 30, 2025 12:03 AM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளை வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவில் பெய்யும் தொடர் மழையால், சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகளில், மழை நீர் கசிவு மற்றும் சேதம் போன்றவைகளை, கிணத்துக்கடவு வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், கண்ணையன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை முழுவதுமாக சேதமடைந்தது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக அவருக்கு, அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.
மேலும், அடுத்த கட்டமாக அவருக்கு நிவாரண நிதி உள்ளிட்ட உதவிகள் செய்து தரப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். வீட்டில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கண்ணையன் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
பாலக்காட்டு கணவாய் பகுதியில் கிணத்துக்கடவு இருப்பதால், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இந்நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளில் வசிப்போரை, அரசின் நிவாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.