/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதி இன்றி கூடுதல் போர்வெல்கள் லே-அவுட்டில் அதிகாரிகள் ஆய்வு
/
அனுமதி இன்றி கூடுதல் போர்வெல்கள் லே-அவுட்டில் அதிகாரிகள் ஆய்வு
அனுமதி இன்றி கூடுதல் போர்வெல்கள் லே-அவுட்டில் அதிகாரிகள் ஆய்வு
அனுமதி இன்றி கூடுதல் போர்வெல்கள் லே-அவுட்டில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 18, 2025 09:45 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் அனுமதி இன்றி கூடுதல் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில், 700க்கும் மேற்பட்ட சைட்டுகள் உள்ளது. இதில், தற்போது வீடுகள் கட்ட துவங்கியுள்ளனர். லே-அவுட்டில், 22 போர்வெல் அமைக்க,பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
ஆனால், இங்கு அனுமதியை மீறி கூடுதலாக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளதாக, லே-அவுட் சுற்று வட்டார விவசாயிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்கள்.
விவசாயிகள் கூறியதாவது:
தனியார் லே-அவுட்டில், அனுமதியை மீறி கூடுதல் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெல் அனைத்தும், 1,000 அடி வரை உள்ளது. கூடுதலாக போர்வெல் அமைத்துக் கொண்டே இருந்தால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.
மேலும், விவசாய நிலங்களில் உள்ள போர்வெல்லிலும் நீர்மட்டம் குறைந்து விடும். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணித்து, அனுமதியின்றி போர்வெல் அமைப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
பேரூராட்சி நிர்வக்தினர் கூறியதாவது:
லே-அவுட்டில், 22 போர்வெல்கள் அமைக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதிகமாக போர்வெல் இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, ஆய்வு செய்த போது, மொத்தம் 44 போர்வெல்கள் இருப்பது தெரியவந்தது. உரிய அனுமதி இல்லாமல் போர்வெல் அமைததற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இங்கு தண்ணீர் தொட்டி போன்ற வசதிகள் இருந்தாலும், தண்ணீர் விநியோகம் செய்ய லே-அவுட்டில் இன்னும் வீடுகள் முழுமை பெறவில்லை. கட்டமைப்பு பணிகள் முடிந்து வரி விதிப்பு செய்த பிறகே, தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.