/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் ஆய்வு
/
ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 07, 2025 07:27 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், புதிய ரயில் பாதைகளும், பிளாட்பாரங்களும் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஊட்டி மலை ரயில் நிறுத்த புதிய ரயில் பாதையும், பிளாட்பாரமும் கட்டப்பட உள்ளது.
டிக்கெட் கவுன்டர் அருகே, 2 புதிய பிளாட்பாரமும், ஒரு ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளது. தற்போது மெமு பாசஞ்சர் ரயில் நிறுத்தும், ரயில் பாதை விரிவாக்கம் செய்து, ஊட்டி மலை ரயில் பாதை மாற்றி அமைக்கப்படும்.
ஒரே நேரத்தில், 24 பெட்டிகள் கொண்ட மூன்று ரயில்கள் நிறுத்துவதற்கு, இடவசதிகள் இருக்கும். இதனால் கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க, வாய்ப்பு உள்ளது. இப்பணிகளை, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

