/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்; அதிகாரிகள் ஆய்வு
/
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்; அதிகாரிகள் ஆய்வு
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்; அதிகாரிகள் ஆய்வு
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்; அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2025 08:41 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, காண்டூர் கால்வாய் சீரமைப்பு மற்றும் துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்புக்கு முன் முழு வீச்சில் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்தின் உயிர்நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய், 1963ம் ஆண்டு வெட்டப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர், சர்க்கார்பதி மின்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு இருந்து, திருமூர்த்தி அணை வரை, 49.3 கி.மீ., நீளத்திற்கு கொண்டு சென்று பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாய் தரைப்பகுதியிலிருந்து, 400 அடி உயரத்தில் அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, முதலாம் மண்டல பாசனம் நிறைவடைந்த நிலையில், கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டது.
பருவமழை துவங்கியுள்ள நிலையில், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பி.ஏ.பி., பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று பாசனத்துக்கு வழங்குவதற்காக, கால்வாய் துார்வாரும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இப்பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு வரும், 27 முதல் தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
அதே போன்று, காண்டூர் கால்வாய் ஜீரோ பாயின்ட் பகுதியில் நடைபெறும் பணிகள் பார்வையிடப்பட்டது. வாகறை பள்ளம் பகுதி அருகே ஷட்டரில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதுவும் தற்போது சீரமைக்கப்படுகிறது.
காண்டூர் கால்வாய் துவக்கப்பகுதியில் கல் சுவர் சிதிலமடைந்துள்ளது. அங்கு கான்கிரீட் சுவர் கட்டும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் வரும், 20ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினார்.