/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சடங்காகிப் போன கிராம சபை கூட்டம் அதிகாரிகள் 'மிஸ்ஸிங்': புகார் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
/
சடங்காகிப் போன கிராம சபை கூட்டம் அதிகாரிகள் 'மிஸ்ஸிங்': புகார் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
சடங்காகிப் போன கிராம சபை கூட்டம் அதிகாரிகள் 'மிஸ்ஸிங்': புகார் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
சடங்காகிப் போன கிராம சபை கூட்டம் அதிகாரிகள் 'மிஸ்ஸிங்': புகார் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : அக் 12, 2025 11:11 PM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
தமிழகம் முழுவதும் ஜன., 26, மே, 1, ஆக., 15, அக்., 2 உள்ளிட்ட, 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. சமீபகாலமாக கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், செயல்முறை படுத்தாமல் கிடப்பில் போடப்படுகின்றன. வெறும் சடங்காக மாறிவரும் கிராம சபை கூட்டங்களை, உயிர் பெற செய்ய வேண்டும் என, பொதுமக்கள் ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும், கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிராம சபை கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என, வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்துக்கு நன்மை விளையக்கூடிய எந்த ஒரு தீர்மானத்தையும், கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றலாம். கிராம சபை தீர்மானங்களின் நகல்களை, கிராம மக்கள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக கிராம சபை கூட்டங்களில் வரவு, செலவுகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இது தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம், குடிநீர் சிக்கனம், பொது சுகாதாரம், கிராம வளர்ச்சி திட்டம், நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கடந்த அக்., 2ல் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், வீரபாண்டி, சோமையம்பாளையம், சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, அசோகபுரம், குருடம்பாளையம், நாயக்கன்பாளையம், பிளிச்சி உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளில் நடந் தது. இக்கூட் டங்களில், வருவாய்த்துறை, வனம், சுகாதாரம், காவல்துறை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில், ஒரு சில துறை அதிகாரிகள் தவிர, பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை.
இது குறித்து, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில்,'கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக, வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிக அளவு உள்ளது.
ஆனால், கிராம சபை கூட்டத்தில் வனத்துறையினர் யாரும் பங்கேற்கவில்லை. விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் யாரிடம் முறையிடுவது என தவித்தனர்.
இதே போல அந்தந்த ஊராட்சிகளில் பிரச்னைகள் அதிகம் உள்ள துறை அதிகாரிகள் கிராம சபை கூட்டங்களை புறக்கணித்து வருகின்றனர். கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கும் துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதே போல மேட்டுப்பாளையம், காரமடை, சூலுார், அன்னுார் ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.