/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் காடுகள் அமைக்க மானியத்தில் நாற்றுகள்
/
வேளாண் காடுகள் அமைக்க மானியத்தில் நாற்றுகள்
ADDED : அக் 12, 2025 11:10 PM
சூலுார்:வேளாண் காடுகள் அமைக்க, விவசாயிகளுக்கு மானியத்தில், நாற்றுகளை, தோட்டக்கலைத்துறை வழங்குகிறது.
சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை அறிக்கை:
சூலுார் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் அமைக்க, மானியத்தில், தேக்கு, மகாகனி, வாகை மர நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன.
ஒரு எக்டருக்கு தோட்டத்தின் சுற்றில் நடவு செய்ய, 160 நாற்றுகள் வழங்கப்படுகின்றன. அடர் நடவு செய்ய , 500 நாற்றுகள் வழங்கப்படுகின்றன. ஒரு விவசாயி அதிகபட்சமாக, 2 எக்டர் வரை பயன் பெறலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆதார் நகல், குடும்ப அட்டை, நகல், சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சூலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, 0422 - 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.