/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவியும் மனுக்களால் திணறும் அதிகாரிகள்; சந்தேகத்தில் பொதுமக்கள்
/
குவியும் மனுக்களால் திணறும் அதிகாரிகள்; சந்தேகத்தில் பொதுமக்கள்
குவியும் மனுக்களால் திணறும் அதிகாரிகள்; சந்தேகத்தில் பொதுமக்கள்
குவியும் மனுக்களால் திணறும் அதிகாரிகள்; சந்தேகத்தில் பொதுமக்கள்
ADDED : ஜூலை 30, 2025 08:47 PM

சூலுார்; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் குவியும் மனுக்களால், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் மக்களும் உள்ளனர்.
சூலுார் தாலுகாவில், கருமத்தம்பட்டி நகராட்சி, கண்ணம்பாளையம் பேரூராட்சி, பாப்பம்பட்டி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதில், 1,500 க்கும் மேற்பட்ட மனுக்கள், மகளிர் உதவித்தொகை கேட்டு அளிக்கப்பட்டுள்ளன.
முகாம்களில், ஆண்கள் விட, பெண்கள் அதிகளவில் பங்கேற்று மனுக்களை அளிக்கின்றனர்.
குவியும் மனுக்கள் : ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் முகாம்களில், பல கோரிக்கைகளுடன் கூடிய மனுக்கள் குவிந்து வருகின்றன. துறை வாரியாக மனுக்கள் பெறப்பட்டாலும், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல், பொதுமக்களும், 'மனுவை கொடுக்கலாம், தீர்வு கிடைக்கிறதா என பார்ப்போம்,' என்ற மனநிலையில் உள்ளனர்.
இதுகுறித்து பெண்கள் கூறுகையில்,' கடந்த சில வாரங்களுக்கு முன், 'உங்கள் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அதிகாரிகள், ஊராட்சிக்கு வந்தனர். அவர்களிடமும் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் கொடுத்தோம்.
தற்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் மனு கொடுத்துள்ளோம். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்ப்போம்,' என்றனர்.