/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டம் கூடுதல் தலைமைச் செயலரிடம் வலியுறுத்தல்
/
பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டம் கூடுதல் தலைமைச் செயலரிடம் வலியுறுத்தல்
பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டம் கூடுதல் தலைமைச் செயலரிடம் வலியுறுத்தல்
பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டம் கூடுதல் தலைமைச் செயலரிடம் வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 10:00 PM

பொள்ளாச்சி; 'அரசு பணியாளர்களுக்கு பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,' என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தினர், கூடுதல் தலைமைச் செயலரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள், ஓய்வூதியக்குழு தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச்செயலர் ககன் தீப்சிங் பேடியை சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதா வது: கடந்த, 2003ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு பின்னர், அரசுப்பணிக்கு வந்து நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவுடன், வாழ்வாதாரத்திற்கான ஓய்வூதியம் வழங்காமல் உள்ளதால், ஓய்வுக்காலம், இருண்ட காலமாக உள்ளது.
பணி காலத்தில் அரசு நடைமுறைப்படுத்தும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும், அனைத்து நிலை மக்களிடம் கொண்டு சேர்க்க துணையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் அரசுப்பணியாளர்கள்.
ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு எட்டாக்கனியாக ஓய்வூதியம் உள்ளதால், மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஊராட்சி செயலர்களுக்கு பணி ஓய்வு பெற்றவுடன், சிறப்பு ஓய்வூதியமாக, 2,000 ரூபாய் மட்டுமே வழங்குவது ஏற்கதக்கதல்ல.
பதிவறை எழுத்தருக்கு இணையான காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை, ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வந்து பணி ஓய்வு பெறும் போது, ஓய்வூதிய பலன்கள் வழங்குவதுடன், மாதாந்திர ஓய்வூதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலாளர் நிலையில் இருந்து, இளநிலை உதவியாளர் பதவி உயர்வு பெற்று பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றிய காலத்தையும், ஓய்வூதிய கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஊதியம், பணியாளர்களுக்கு பயனளிக்காத திட்டமாகும். எனவே,அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை வழங்க ஓய்வூதியக்குழு தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.