/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதியில்லாத பழைய பஸ் ஸ்டாண்ட்
/
அடிப்படை வசதியில்லாத பழைய பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜூலை 06, 2025 11:16 PM

வால்பாறை; வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வால்பாறை நகரில், புதிய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் என மூன்று பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
காந்திசிலையில் இருந்து, ேஷக்கல்முடி, சோலையாறு அணை, முடீஸ், சின்கோனா, வில்லோனி உள்ளிட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அக்காமலை, வெள்ளமலை, கருமலை செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பழைய பஸ் ஸ்டாண்ட், இரு பஸ்கள் நிறுத்தும் அளவுக்கு மிகவும் குறுகலாக உள்ளது.இந்த பஸ் ஸ்டாண்டில் இருக்கை, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை.
பயணியர் கூறியதாவது:
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில், மழை காலத்தில் உள்ளே நிற்க முடியாத அளவிற்கு பஸ் ஸ்டாண்ட் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பயணியர் அமர இருக்கை வசதி இல்லாததால் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கழிப்பிட வசதியும் இல்லை.
எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத குறுகலான இந்த பஸ் ஸ்டாண்டை, நகராட்சி சார்பில் விரிவுபடுத்தி, பயணியர் நலன் கருதி போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.