ADDED : செப் 26, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூதாட்டியை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஊஞ்சவேலாம்பட்டியில் கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நின்ற மூதாட்டியிடம் விசாரித்த போது, தேனி மாவட்டத்தை சேர்ந்த சாந்தாமணி,71, என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.