/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கத்திக்குத்து வழக்கில் முதியவருக்கு சிறை
/
கத்திக்குத்து வழக்கில் முதியவருக்கு சிறை
ADDED : பிப் 04, 2024 12:00 AM
கோவை:கத்திக்குத்து வழக்கில் முதியவருக்கு, நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை கிரேட் டவுன் நடைபாதை பகுதியில், உமர் என்பவரும், அவரது மனைவியும் தங்கியிருந்தனர். 2020, செப்., 20, இரவில் சாப்பிட்டது போக மீதி உணவை, தெருநாய்க்கு வைத்தனர். தெரு நாய் சாப்பிட்டபோது, அதே பகுதியில் தங்கியிருந்த மொய்தீன்,60, என்பவர் கல்லால் அடித்து விரட்டினார். இதை உமர் தட்டி கேட்டதால், அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த உமர்,தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, மொய்தீனை கைது செய்து, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி வேதகிரி, மொய்தீனுக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.