/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெட்டிக்கடையில் மூதாட்டி தற்கொலை
/
பெட்டிக்கடையில் மூதாட்டி தற்கொலை
ADDED : மே 15, 2025 11:39 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், 64. முட்டை வியாபாரி. இவரது மனைவி சாரதா, 60. அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 45 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. சாரதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பெட்டிக்கடையில் யாரும் இல்லாத போது, சாரதா சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற கணவர் வேணுகோபால் பெட்டி கடைக்கு வந்து பார்த்தபோது மனைவி இறந்தது தெரிய வந்தது.
அவர் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.