/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து இன்று பிரேத பரிசோதனை
/
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து இன்று பிரேத பரிசோதனை
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து இன்று பிரேத பரிசோதனை
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து இன்று பிரேத பரிசோதனை
ADDED : நவ 12, 2025 10:59 PM
அன்னுார்: கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை போலீசார் இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
கஞ்சப்பள்ளியைச் சேர்ந்தவர் லோகேந்திரன், 33. பைனான்சியர். இவருக்கு ஜாய் மெட்டில்டா, 27. என்னும் மனைவியும், ஆறு வயது மகனும் உள்ளனர். ஒரே நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜாய் மெட்டில்டாவுக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த நாகேஷ், 25. என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாளை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்தனர். பின்னர் மயிலாத்தாள் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடி விட்டனர்.
இதையடுத்து உறவினர்கள் மயிலாத்தாள் உடலை கஞ்சப்பள்ளி பகுதியில் புதைத்து விட்டனர். பின்னர் கடந்த மாதம் கணவர் லோகேந்திரனை கொல்ல முயற்சித்த போது இருவரும் பிடிபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இருவரையும் போலீஸ் காவலில் நேற்று முன்தினம் அன்னுார் போலீசார் எடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று மதியம் கஞ்சப்பள்ளியில் உள்ள லோகேந்திரன் வீட்டுக்குச் சென்று முதல் மாடியில் கொலை சம்பவம் எப்படி நடந்தது என இருவரையும் அங்கு நிறுத்தி விசாரித்தனர். பின்னர் ஜாய் மெட்டில்டாவின் தாயார் செல்மா வீட்டுக்கும் சென்று அவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது வடக்கு வருவாய் ஆய்வாளர் குருநாதன், எஸ்.ஐ., அழகேசன் உடன் இருந்தனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட மூதாட்டி மயிலாத்தாளின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் இன்று மாலை போலீஸ் காவல் முடித்து ஜாய் மெட்டில்டா மற்றும் நாகேஷ் இருவரையும் மீண்டும் அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

