/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் மூதாட்டிகளிடம் செயின் திருட்டு; தமிழகத்தை சேர்ந்த இரு தம்பதியர் கைது
/
கேரளாவில் மூதாட்டிகளிடம் செயின் திருட்டு; தமிழகத்தை சேர்ந்த இரு தம்பதியர் கைது
கேரளாவில் மூதாட்டிகளிடம் செயின் திருட்டு; தமிழகத்தை சேர்ந்த இரு தம்பதியர் கைது
கேரளாவில் மூதாட்டிகளிடம் செயின் திருட்டு; தமிழகத்தை சேர்ந்த இரு தம்பதியர் கைது
ADDED : நவ 12, 2025 10:58 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே செயின் திருட்டில் ஈடுபட்ட, தமிழகத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சொரனூர் தபால் நிலையம் அருகே உள்ள வணிக நிறுவனத்தில், பொருட்களை வாங்க வந்த மூதாட்டியின் இரண்டு சவரன் தங்க செயின் திருட்டு போனது. இது தொடர்பாக மூதாட்டி சொரனூர் போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், வணிக நிறுவனத்தின் சி.சி.டி.வி., பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரித்தனர்.
மூதாட்டியின் செயினை திருடியது, தமிழகத்தில் திருவள்ளூர் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரதி, 46, அவரது கணவர் கணேசன், 46, விருதுநகர் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா, 39, அவரது கணவர் இளையராஜா 39, ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் கன்னிமாரி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்த நான்கு பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கூறியதாவது:
கடந்த, 3ம் தேதி மதியம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. பொருட்களை வாங்குவது போன்று வந்து மூதாட்டியின் செயினை திருடியுள்ளனர். கைதானவர்கள் வழக்கமாக தங்க செயின் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள். இச்சம்பவம் நடந்த அதே நாளில், ஒற்றப்பாலம் அரசு மருத்துவமனையில் மற்றொரு மூதாட்டியின் இரண்டரை சவரன் தங்க செயினையும், திருச்சூர் மாவட்டம் மண்ணுத்தி பகுதியில் பஸ்சில் பயணித்த இரு பெண்களின் செயினையும் இந்த கும்பல் திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இக்கும்பலை நேற்று கைது செய்தோம். செயின்களை விற்ற பணம் ரூ. 5.19 லட்சம் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

