ADDED : ஜூன் 02, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
கோவை: நாளை மறுதினம் பள்ளிகள் திறக்க உள்ள சூழலில், கோவையிலிருந்து பலரும் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆம்னி பஸ் நிறுவனத்தினர்வழக்கத்துக்கும் மாறாக, தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் வசூலிக்கும்கட்டணத்துக்கும் அதிகமாக வசூலித்தனர்.
கோவையிலிருந்து சென்னை, பெங்களூருவுக்கு, வழக்கமாக ஆம்னி பஸ்களில் 1,000 முதல் 1,200ரூபாய் வரை வசூலிக்கப்படும். வார விடுமுறை நாட்களில் சற்று அதிகமாக வசூலிக்கப்படும். நேற்று 3,000 ரூபாயிலிருந்து 3,500 வரை டிக்கெட் கட்டணம் பெற்றனர்.
அதே போல் நெல்லை, நாகர்கோவிலுக்கு செல்லவும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
