/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹரே கிருஷ்ணா சார்பில் கிருஷ்ணர் திருவீதி உலா
/
ஹரே கிருஷ்ணா சார்பில் கிருஷ்ணர் திருவீதி உலா
ADDED : செப் 23, 2024 12:10 AM
அன்னுார் : அன்னுாரில் 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் சார்பில், கிருஷ்ணர் திருவீதி உலா நடந்தது.
'ஹரே கிருஷ்ணா' இயக்கம் சார்பில், கிருஷ்ணர் நாமத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும் என வலியுறுத்தும், உலக ஹரி நாம் விழா உலகம் முழுவதும் செப்., 17 முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அன்னுாரில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் கோவிலில் இருந்து கிருஷ்ணர் திருவீதி உலா துவங்கியது.
அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் வீற்றிருக்கும் சப்பரம், ஓதிமலை ரோடு, கடைவீதி, சத்தி ரோடு, தர்மர் கோவில் வீதி வழியாக மீண்டும் பெருமாள் கோவிலை அடைந்தது. பல இடங்களில் பக்தர்கள் கிருஷ்ணருக்கு வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணர் பாடல்கள் பாடப்பட்டன.
திருவீதி உலா முடிவில், கரிவரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் சொற்பொழிவு நடந்தது. 'இஸ்கான்' மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ், கிருஷ்ணர் நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.
இஸ்கான் இயக்க நிர்வாகிகள் சேஷரூப நித்ய தாஸ், சேவா பாராயண தாஸ், சங்கரசியான் கவுரவ தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.