/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
/
சங்கரா கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : ஆக 29, 2025 10:11 PM

கோவை; சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் நுண்கலை மன்றம் சார்பில், கேரள பாரம்பரியபடி, ஓணம் பண்டிகைகோலாகலமாக நடந்தது. கல்லுாரி அறங்காவலர் மற்றும் செயலர் ராமச்சந்திரன், விழாவைத் துவக்கி வைத்தார்.
கல்லுாரி வளாகம் முழுவதும், வண்ணமயமான பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள், பேராசிரியர்கள் கேரள பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர். செண்டை மேளம் முழங்க மகாபலி சக்கரவர்த்தியின் வருகையைக் குறிக்கும், பாரம்பரிய ஊர்வலத்துடன் விழா துவங்கியது.
அத்தப்பூக்கோலம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. கதகளி, புலி நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவாதிரை, மோகினியாட்டம், வாமன அவதாரத்தை மாணவர்கள் நிகழ்த்தினர். நிறைவாக, 'சத்யா' எனும் ஓண விருந்து பரிமாறப்பட்டது.
கல்லுாரி இணைச் செயலர் சந்தியா, துணை இணை செயலர் நித்யா, ராம் ராமச்சந்திரன், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் பங்கேற்றனர்.